என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொச்சி விமான நிலையம்"
- பாங்காக்கில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
- கோழிக்கோடு முகமது ஜாகிர், எர்ணாகுளம் நிசாமுதீன், மலப்புரம் ஜம்ஷீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் மூலம் அடிக்கடி போதை பொருட்கள், தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாங்காக்கில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த 3 பயணிகள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது கலப்பின கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.7.47 கோடி ஆகும்.
இதனை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்ததாக கோழிக்கோடு முகமது ஜாகிர், எர்ணாகுளம் நிசாமுதீன், மலப்புரம் ஜம்ஷீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- அரபு நாடான ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது.
- நவுசாத் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரபு நாடான ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது நவுசாத் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரது உடமைகளை பரிசோதித்து பார்த்த போது, 'புளுடூத் ஸ்பீக்கரில்' மறைத்து தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 1.35 கிலோ அளவிலான தங்கத்தை 2 உருளை வடிவங்களில் எடுத்து வந்திருந்தார். அதன் மதிப்பு ரூ.99 லட்சம் ஆகும். அதனை யாருக்காக கடத்தி வந்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார்.
- பெண் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
திருவனந்தபுரம்:
துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண், சானிட்டரி நாப்கினுக்குள் வைத்திருந்த 679 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சம் ஆகும். சானிட்டரி நாப்கினுக்குள் மறைத்துவைத்து தங்கத்தை கடத்தி வந்த அந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதியை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கொச்சி விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த தம்பதி முகமது சுபைர் மற்றும் முகமது ஜனுபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களின் உடலில் கேப்ஸ்யூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சுமார் 1202.55 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதி முகமது சுபைர், முகமது ஜனுபர் இருவரையும் கைது செய்தனர்.
- கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.
கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேரளாவின் கொச்சிக்கு வந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.
- கொச்சியை நெருங்கியபோது திடீரென விமானத்தின் ஹைட்ராலிக் எந்திரங்கள் செயல்படவில்லை
திருவனந்தபுரம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு 7.13 மணிக்கு தரை இறங்க வேண்டும்.
விமானம் கொச்சியை நெருங்கிய போது திடீரென விமானத்தின் ஹைட்ராலிக் எந்திரங்கள் செயல்படவில்லை. இதை அறிந்த விமானி உடனே கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
நடுவானில் விமானம் பழுதானதை தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஓடு பாதையில் இருந்த விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அவசர பாதுகாப்பு எந்திரங்கள் உதவியுடன் விமானத்தின் பழுதை சரிசெய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் 16 நிமிடங்கள் தாமதாமாக 7.29 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. இது பற்றி பயணிகள் கூறும்போது, விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறங்கியதாக தெரிவித்தனர்.
விமானம் தரை இறங்கிய பின்பு விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்பு மற்ற விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நெடும்பசேரி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 2 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் உடமைகளை தீவிர சோதனை செய்தனர்.
இதில் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.2.13 கோடி ஆகும். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிவாசன், பக்ரூதின் உசேன் என்பது தெரிய வந்தது.
அதிகாரிகள் அவர்களை கைது செய்து கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஒரே நாளில் கொச்சி விமான நிலையத்தில் ரூ.2.13 கோடி தங்கம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதே நேரம் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறி விட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.
இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஐயப்ப பக்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.
திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. #TruptiDesai #Sabarimala
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அபுதாபி செல்ல வேண்டிய பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
அப்போது, ஒரு லக்கேஜை ஸ்கேன் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதற்குள் ஏதோ ஒன்று ஊர்வதைக் கண்டனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டித் தந்ததாக தெரிவித்தார். மற்றபடி பாம்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சுனில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர். #CochinAirport
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார்.
கொச்சிக்கு பார்சல் சென்றதும் அங்கு வந்து பார்சல்களை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பார்சல் கூரியரை அணுகினார்.
அப்போது பார்சல் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்பலாமே? ஏன் சென்னையில் இருந்து இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிரசாந்தகுமார் முறையாக பதில் கூறவில்லை.
இதனையடுத்து கூரியர் ஊழியர் எர்ணாகுளம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது ரூ.200 கோடி மதிப்புள்ள 32 கிலோ மெத்தடின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து பிரசாந்தகுமார் தலைமறைவனார். அவரை கேரள போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் வைத்து பிரசாந்தகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்